Wednesday, 6 September 2017

நியமிக்கப்பட்ட மைபிபிபி சத்யா சுதாகரன் சாக்கடை அரசியல் வேண்டாம்- பகாங் மாநில புத்ரா தலைவர் உகனேஸ்வரன் பதிலடி.
===============

ஒரு போதும் மைபிபிபி கட்சியை ம.இ.கா-விடம் ஒப்பீடு செய்யக்கூடாது. ம.இ.கா தலைவர்கள் என்ன செய்தார்கள் என்று நீர் எதையும் எடைப்போடாதே. நீர் பிறந்ததோ பெந்தோங் ஆனால் நீர் இருப்பதோ கூட்டரவு பிரதேசம்.
டத்தோ குணாவின் சேவையை மதிப்பிடவோ எடைப்போடவோ உங்களுக்கு எந்த ஒரு தகுதியும் இல்லை. ஏனென்றால் நீங்கள் உங்கள் மாபெரும் தேசியத் தலைவருக்கு கைத்தட்டி கும்மாளம் போடும் குஷ்டியில் சேர்ந்தவர். அதனால்தான் இம்மாதிரியான அறிக்கை வெளிவந்துள்ளது. என்றாவது உங்களின் மக்களின் கொள்கையை முன்வைத்துள்ளீர்களா...யாராவது முன்வைத்தால் கட்சியிலிருந்து நீக்கி விடுவார் உங்கள் தலைவர்.
உங்கள் மக்களின் சேவை என்ன? பிள்ளைகளுக்கு மிட்டாய் வழங்குவது, நடமாடும் கழிவரை நிகழ்ச்சி, ரி.ம.5 க்கு மோட்டார் வண்டிக்கு பெட்ரோல் வழங்குவது என ஏற்பாடு செய்து மக்கள் சேவை எனும் பொய்யான தோற்றத்தில் கேமரன் மலையில் பொழுது கழிப்பது தான் உங்களின் சமுதாய பற்று. ஒரு நாள் இரு நாள் அங்கேயே இருப்பது கடைசியில் அந்த நாடாளுமன்றம் எங்களுக்கே கொடு இல்லையேல் சுயட்சியாக நிர்போம். இதுதான் உண்மையான குப்பை அரசியல் சகோதரா சத்தியா அவர்களே.
பகாங் மாநிலம் முதல்வரின் சிறப்பதிகாரி டத்தோ குணாவின் செய்த செய்கின்ற செய்யப்போகும் சேவைய நீர் புள்ளி விபரத்துடன் தெரிய வேண்டும் என்றால் முதலில் பகாங் மாநிலத்திற்கு வாருங்கள். முன்னே எடுத்து வைக்கிரோம். அதைவிட்டு விட்டு வழிக்கட்டு அறையில் உட்கார்ந்துக்கொண்டு பாலர்பள்ளி மாணவர்களைப்போல அறிக்கை விட்டு குளிர்காய வேண்டாம். பகாங் மாநில இந்திய வாழ் தமிழ் மக்களுக்கு அவர்களின் நலத்திற்கும் என்றும் எப்போதும் சிந்தித்து செயல்படுபவர் இவர். உங்களின் அடிமட்ட விளம்பர அரசியலுக்கு இவர்களைப்போன்ற நல்லுல்லங்களை பகடகாயாக பயன்படுத்த வேண்டாம்.
உங்கள் தேசியத் தலைவரை முதலில் ஒருநிலைப்பாட்டோடு முடிவெடுக்கச் சொல்லி தாருங்கள். ஆமாம் உங்களுக்கு ஒருவர் வந்து புள்ளி விபர அறிக்கை விட சொல்லி தர வேண்டிய நிலை. மக்களை ஏமாற்றாமல் சுயநலமின்றி முன் வந்து சேவை செய்யுங்கள் இல்லையேல் போய் சின்ன பிள்ளைகளுக்கு மிட்டாய் தாருங்கள் வழங்கம்போல்.
-செ.உகனேஸ்வரன் - பகாங் மாநில ம.இ.கா. புத்ரா தலைவர்

No comments:

Post a Comment

தேசியத் தோட்டத் தொழிலாளர் சங்கம் ரி.ம. 132,200.00 பெந்தா தோட்டத் தொழிலாளர்களுக்கு இழப்பீட்டுத் தொகையை வாதாடி கொடுக்கப்பட்டது. தெமெர்லோ, ...