Monday, 17 December 2018

சங்கத்தின் அங்கத்தினர்களாக பதிவு செய்கிறார் என்றால் அவர் செலுத்தும் சந்தா காப்புறுதி பணமாக திரும்பி அவரை வந்து அடைகிறது- செ.உகனேஸ்வரன்
==============================================================
அங்கத்தினர் பலம்தான் சங்கத்தின் உயிர் நாடி. நூற்றுக்கு நூறு விழுக்காடு தோட்டத் தொழிலாளர்கள் அங்கத்தினர்களாகும் போதுதான் சங்கம் நினைத்ததை சாதிக்க முடியும். அந்த சாதனைகள் என்பது அங்கத்தினர்களுக்கு நன்மைகளைக் கொண்டு வருந்தத்தக்கதாகத்தான் இருக்கும். அங்கத்தினகளின் நலன் கருதி சங்கம் எத்தனையோ சலுகைகளைப் பெற்றுக் கொடுத்து வருகிறது. சந்தாவாகச் செலுத்தும் பணத்திற்குக் கூடுதலாகவே பலன்களை மாதந்தோறும் பெற்றுக் கொடுக்கிறது. மாதச்சந்தா செலுத்தும் அங்கத்தினர்களுக்கு அவர்கள் செலுத்தும் தொகையைவிட கூடுதலான தொகையை தோட்ட நிர்வாகங்கள் காப்புறுதியாக செலுத்துகின்றன. எனவே, ஒரு தொழிலாளி சங்கத்தின் அங்கத்தினராக பதிவு செய்கிறார் என்றால் அவர் செலுத்தும் சந்தா காப்புறுதி பணமாக திரும்பி அவரை வந்து அடைகிறது.

இவ்வளவு வாய்ப்புகள் இருந்தும் அதனை தோட்டத் தொழிலாளர்கள் பயன்படுத்திக் கொள்ளவில்லை என்றால், அதனால் இழப்பு தொழிலாளர்களுக்குதான். சங்கத்தைப் பொறுத்த வரை அங்கத்தினராகும் வாய்ப்பை அனைவருக்கும் வழங்கி இருக்கிறது. அந்நியத் தொழிலாளர்கள் சங்கத்தின் அங்கத்தினர்களாகி பயனை அனுபவிக்கிறார்கள். நம்மவர்கள் இன்னமும் அலட்சியம் காட்டுகின்றனர். அத்தகையவர்களுக்கு சங்கத்தின்வழி கிடைக்கும் நன்மைகள் தோட்டச் செயலவை உறுப்பினர்கள் தெளிவாக விளக்கி அங்கத்தினர்களாக சேர்க்க முயல வேண்டும்.

அன்மையில் பகாங் மாநில தேசியத் தோட்டத் தொழிலாளர் சங்கம் தனது பணிமடையில் தமது அங்கத்தினர்களின் மரண இழப்பீட்டிற்கு காப்புறுதி பணத்தை வழங்கியது. இந்நிகழ்வில் தெமர்லோ நகரத்தின் மனிதவல அமைச்சின் அதிகாரி திரு,ஜுவ்ரிசால் அவர்கள் கலந்து சிறப்பித்தார். மேலும் லிப்பீசில் இருக்கும் செல்போன் தோட்ட மேலாளர் திரு.சரவணன் அவர்களும் இணைந்து சிறப்பித்தார். மாதந்தோரும் அங்கத்தினரும் தோட்ட நிர்வாகமும் இணைந்து சங்கத்தின் வழி அமைக்கப்பட்டுள்ள காப்புறுதியின் இழப்பீட்டை வழங்க, 4 அங்கத்தினர்களின் குடும்ப வாரிசுதாரர்களை அழைத்தோம் என்றார் பகாங் மாநில தேசியத் தோட்டத் தொழிலாளர் சங்க மாநில செயலாளர் திரு.செ.உகனேஸ்வரன் அவர்கள்.

தோட்டத்தில் வேலை செய்பவர்கள் கட்டாயம் சங்கத்தில் இணைந்து அதன் வழி கிட்டும் அனுகூலங்களை பெறுமாறு கேட்டுக்கொண்டார் மனிதவல அமைச்சின்அதிகாரி திரு.ஜுவ்ரிசால் அவர்கள். முடிந்தவரையில் அனைவரும் தங்களது துணைவர் மற்றும் பிள்ளைகளை இந்த சங்க காப்புறுதியில் இணைத்து கொள்வது மிகவும் அவசியம் என்றார் செல்போன் தோட்ட மேலாளர் திரு.சரவணன் அவர்கள்.

இந்த அனுகூலங்கள் அனைத்தும் பெற வேண்டும் என்றால் கட்டாயம் சங்கத்தில் இணைய வேண்டும், இல்லையேல் அவை கிடைக்காது. பகாங் மாநிலம் முழுவதும் தெ.தோ.தொ.ச. தோட்டங்களுக்குச் சென்று இதன் பலனை தெளிவுப்படுத்துகிறது என்றார் சங்க மாநிலச் செயலாளர் திரு. செ. உகனேஸ்வரன் அவர்கள். ஆக தோட்டத்தில் வேலை செய்யும் வேலை ஆட்கள் கட்டாயம் சங்கத்தில் இணைவது மிகவும் அவசியம்.

No comments:

Post a Comment

தேசியத் தோட்டத் தொழிலாளர் சங்கம் ரி.ம. 132,200.00 பெந்தா தோட்டத் தொழிலாளர்களுக்கு இழப்பீட்டுத் தொகையை வாதாடி கொடுக்கப்பட்டது. தெமெர்லோ, ...