தேசியத் தோட்டத் தொழிலாளர் சங்கம் ரி.ம. 132,200.00 பெந்தா தோட்டத் தொழிலாளர்களுக்கு இழப்பீட்டுத் தொகையை வாதாடி கொடுக்கப்பட்டது.
தெமெர்லோ,
பெந்தா தோட்டம் லிப்பிஸ் வட்டாரத்தில் அமைந்துள்ளது. கடந்த 2016-ஆம் ஆண்டு ஏறத்தாள 9 பால் மரவெட்டு தொழிலாளர்களை அதன் நிர்வாகம் வேலையிலிருந்து நீக்கியது. ஆனால் கொடுக்கப்பட்ட இழப்பீட்டு தொகை சட்டத்தின் கீழ் கணக்கிட்டு கொடுக்கப்பட வில்லை. ஆக, தே.தோ.தொ.ச.(NUPW) அதனை மறுபரிசீலனை செய்து மீண்டும் கணக்கிட்டு அதன் நிர்வாகத்திடம் சமர்ப்பித்தது. ஆனால் அதன் நிர்வாகம் அதனை மறுத்த விட்டது.

NUPW அரசாங்க இலாக்காவிடம் இந்த பிரச்சனையை முன் வைத்து ஒரு முழுமையான தீர்வு காண சந்தித்தது. பிறகு புத்ராஜயவில் இப்பிரச்சினையை கொண்டுச் செல்லப்பட்டது. ஆக NUPW கணக்கெடுப்பு சரி என அரசாங்க இலாக்கா தீர்ப்பு கொடுத்தது. மொத்த இழப்பீடு தலா ரிம.132,200.00 அவர்களுக்கு வழங்கப்பட்டது.
பகாங் மாநில தொழில் உறவு இலாக்காவின் இயக்குநர் மதிப்புமிகு முகமது நோர் அவர்கள் முன்னிலையில் இந்த இழப்பீட்டு தொகையை காசோலையை வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சி NUPW பணிமடையில் வழங்கப்பட்டது.
பகாங் மாநில NUPW மாநிலச் செயலாளர் திரு.செ.உகனேஸ்வரன் அவர்கள் தேசிய பொதுச் செயலாளர் மதிப்புமிகு டத்தோ கோ.சங்கரன் அவர்களுக்கு இவ்வேலையில் மிகுந்த நன்றியினை தெரிவித்துக் கொண்டார். காரணம் டத்தோ அவர்களின் விடாமுயற்சியின் கீழ் அரசாங்க இலாக்காவின் ஆலோசனைப்படி கொண்டுவரப்பட்டது. மேலும் நிர்வாக செயலாளர் திரு நவமுகுந்துன் அவர்களுக்கும் நன்றியினை தெரிவித்துக் கொண்டார்.
- செ.உகனேஸ்வரன் [ பகாங் நிலச் செயலாளர் தே.தோ.தொ.ச.]

No comments:
Post a Comment